Mnadu News

பாரத் ஜோடோ யாத்திரையின்போது விவசாயிகளின் வலியை உணர்ந்தேன்: ராகுல்காந்தி உருக்கம்.

சத்தீஷ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி, கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மாநாட்டின் இறுதி நாளான இன்று ராகுல்காந்தி பேசினார். நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையில் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எனது நாட்டிற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி நான் நடைபயணம் மேற்கொண்டேன். யாத்திரையின் போது என்னுடனும், கட்சியுடனும் ஆயிரக்கணக்கானோர் இணைந்தனர். பாரத் ஜோடோ யாத்திரையின் போது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டேன்… அவர்களின் வலியை உணர்ந்தேன் என்றார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More