ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.விபத்து நடந்தபோது பணியில் இருந்த சிலரை சிபிஐ தங்களின் வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருந்த சிக்னல் பிரிவு இளநிலை பொறியாளர் அமீர் கான், பாலசோரில் அவர் குடியிருந்த வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகின. இந்த செய்தி ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்நிலையில்,ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையில்லை என்றும், சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More