Mnadu News

பாலியல் துன்புறுத்தல்: வாலிபரை பெல்டால் அடித்த பள்ளி மாணவி.

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் தினமும் 19 மற்றும் 17 வயது சகோதரிகள் பள்ளிக்கு சென்று வந்து உள்ளனர். அவர்களில் இளைய சகோதரி சைக்கிளில் சென்றபோது, அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.இதுபற்றி தனது சகோதரியிடம் அந்த மாணவி கூறியுள்ளார்.இதையடுத்து, அந்த நபருக்கு தக்க பாடம் புகட்டும்படி தனது மகள்களிடம் கூறி உள்ளார்.இந்நிலையில், வழக்கம்போல் கையை பிடித்து இழுத்து அந்த நபரை, சகோதரிகள் இருவரும் பெல்டால் அடித்து, துவம்சம் செய்து உள்ளனர்.இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, காக்தாபீத் காவல் துறையினர் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மாணவியை பின்தொடருதல் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends