உத்திரப்பிரதேசத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து.பின்னர் அந்த குழந்தையின் கழுத்தை அறுத்து கழிவு நீர் ஓடையில் வீசப்பட்டார்.ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை உயிர் பிழைத்தது. அதையடுத்து அந்த சிறுமி கொடுத்த தகவலின் பேரில் டெல்லி போலீசார், கொலைகாரனை தேட தொடங்கினர்.கடைசியாக கடந்த 2015-ஆம் ஆண்டு டெல்லி, ரோகிணியில் உள்ள சுக்பீர்நகர் பஸ்நிலையம் அருகே குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த ரவீந்திரகுமார் சிக்கினார். அவரை போலீஸ் விசாரித்த போது அவன் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக ஒப்புக் கொண்டான்.அதையடுத்து, அவரால் கடத்தி பாலியல் பலத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பட்டியலை திரட்டினர். இதில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ரவீந்திரகுமார் மீது டெல்லி நீதிமன்றத்தில்; வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், ஏதுமறியா குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ரவீந்திரகுமாருக்கு நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.அதே கருத்தை எம்நாடு தொலைக்காட்சி; வலியுறுத்துவதுடன் இந்த குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகிறது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More