Mnadu News

பா.ஜ.க. பூஜ்யம் ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம்: மம்தா பானர்ஜி பேச்சு.

பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல் அமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சந்தித்து பேசிய பிறகு ஹவுரா நகரில் செய்தியாளர்களிடம் பேசியுள்;;ள மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி,நான் நிதிஷ் குமாரிடம் ஒரேயொரு வேண்டுகோள் வைத்தேன்.அதாவது, பீகாரில் இருந்து ஜெயபிரகாஷ்ஜியின் இயக்கம் தொடங்கியது.அதே போல், பீகாரில் நாம் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால், அடுத்த கட்டத்தை நோக்கி செல்வது பற்றி முடிவு செய்யலாம் என கூறினேன்.அதே நேரம்,முதலில், நாம் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை மக்களுக்கு தரவேண்டும்.அதே சமயம், பா.ஜ.க. பூஜ்யம் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும்.ஆனால், ஊடகங்களின் ஆதரவு மற்றும் பொய்களால் அவர்கள் ஒரு பெரிய கதாநாயகராக உருவாகி இருக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.

Share this post with your friends