பிச்சைக்காரன் :
இயக்குநர் சசி இயக்கத்தில் 2016 வெளியாகி சத்தமே இல்லாமல் மாபெரும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் “பிச்சைக்காரன்”. வெறும் ₹16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ₹40 கோடிகளை இந்திய அளவில் அள்ளியது. இந்த படத்தில் இடம் பெற்ற வசனங்கள் பெரும் பேசு பொருள் ஆகின. அந்த நேரத்தில் தான் ₹500,₹1000 ரூபாயை மத்திய அரசு தடை செய்தது. பிச்சைக்காரன் வெற்றி இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆன்டனி இருவருக்குமே புதிய பாதையை துறந்தது.
₹2000 ரூபாய் நோட்டு பான்:
பிச்சைக்காரன் 1 வரும் போது ₹500, ₹1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டது. சொல்லி வைத்தார் போல, பிச்சைக்காரன் 2 வெளியாகும் போது ₹2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. எதேட்சியாக அறிவிப்பு வெளியான இந்த நேரம் படமும் இதே நேரத்தில் வெளியாகவே அந்த வகையில், பிச்சைக்காரன் படத்துக்கு ஒரு பெரும் பிரமோஷன் ஆகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது.
பிச்சைக்காரன் 2 :
பிச்சைக்காரன் படத்தின் மகத்தான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை விஜய் ஆன்டனி இயக்க முடிவு செய்து அவரே தயாரித்து இயக்கி உள்ளார். காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பட்ஜெட் ₹15 கோடி என சொல்லப்படும் நிலையில், தற்போது வரை சுமார் ₹35 கோடிகளை அள்ளி, விஜய் ஆண்டனியின் கேரியரை இன்னும் உயர்த்தி உள்ளது எனலாம்.
பிச்சைக்காரன் 3 :
பிச்சைக்காரன் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றி, பிச்சைக்காரன் 3 படத்தை உருவாக்க புதிய உத்வேகத்தை அளித்து உள்ளதாக விஜய் ஆன்டனி கூறி உள்ளார். ஆம், பிச்சைக்காரன் பார்ட் 3 வரும் 2025 ஆம் ஆண்டு துவங்கப்படும் என கூறப்படுகிறது. அதே போல படத்தின் பட்ஜெட் குறித்த செய்தி தற்போது கசிந்து உள்ளது. சுமார் ₹100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.