டெல்லியில் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்கள் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட உள்துறை அமைச்சக அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.பேரிடர் மேலாண்மையில் அடுத்த கட்டத்தை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.பேரிடர் மேலாண்மையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.தற்போது அரபிக்கடலில் பிபர்ஜாய் புயல் உருவாகியுள்ள சூழ்நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More