கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வடக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர பிபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச், சௌராஷ்டிரா இடையே கரையைக் கடந்தது.புயல் கரையைக் கடக்கும் போது 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசித் தொடங்கி படிப்படியாக அதிகரித்தது. பல்வேறு இடங்களில் கட்டடங்களில் மேற்கூரைகள் மற்றும் சாலைகள் பாதிக்கப்பட்டன. பிபர்ஜாய் புயலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர். 23க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளது, 442 கிராமங்களில் வசிக்கும் 19 லட்சத்து 12 ஆயிரத்து 337 பேர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சூழலில்,டெல்லி முதலமைச்சர் கேஜரிவால் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஆம் ஆத்மி கட்சித் தொழிலாளர்கள் அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபடவும், மக்களுக்கு உதவவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More