கிழக்கு மத்திய அரபிக் கடலில் கடந்த 6-ஆம் தேதி உருவான பிபர்ஜாய் புயல், ஜகாவ் துறைமுகம் அருகே கரையை கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புயலையொட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அரசு சார்பில் காந்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்ற அம் மாநில முதல் அமைச்சர் பூபேந்திர படேல், அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More