பிபர்ஜாய் புயல் குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.புயல் கரையை கடக்கும்போது குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு, காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 150 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து,கடற்கரையோரப் பகுதிகளில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதோடு;, அதிதீவிர புயலாயன பிபர்ஜாய் காரணமாக குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு எங்கே உள்ளது சொல்லுங்க? அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
Read More