கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல், குஜராத்தின் மாண்டவி நகருக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.புயல் கரையைக் கடக்கும்போது பாகிஸ்தானின் பல மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு, காற்றின் வேகம் மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தட்டா, பாடின், சஜாவால், தர்பர்கர், கராச்சி, மிர்புர்காஸ், உமர்கோட், ஹைதராபாத், ஓர்மாரா, டான்டோ அல்லாஹியார் ஆகிய பகுதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளோருக்கு சுத்தமான குடிநீர் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More