புயல் குறித்து பேசியுள்ள ஜெய்ப்பூரின் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ராதேஷ்யம் சர்மர், பிபர்ஜாய் புயலின் தாக்கம் ராஜஸ்தனின் 12 மாவட்டங்களில் காணப்படும். ஜூன் 15 அன்று நண்பகலுக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை தொடங்கும். ஜூன் 16 அன்று, ஜோத்பூர் மற்றும் உதய்பூர் பிரிவு மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்யும்.தென்மேற்கு ராஜஸ்தானில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும். ஜூன் 17 அன்று ஜோத்பூர், உதய்பூர் மற்றும் அஜ்மர் பிரிவுகளின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.பிபர்ஜாயின் தாக்கத்தால்; பான்ஸ்வாரா, துங்கர்பூர், உதய்பூர், சிரோஹி, ஜலூர், பார்மர், ஜெய்சால்மர், பாலி, ஜோத்பூர், பிரதப்கர், ராஜ்சமந்த், சிட்டோர்கர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More