Mnadu News

பிபர்ஜாய்: 10 நாள்களுக்கும் மேல் கடலில் நீடிக்கும் முதல் புயல்.

உலக வெப்பமயமாதல் காரணமாக, அரபிக் கடலில் புயல் உருவாவது அதிகரிக்கும் என்றும், அது அதிதீவிர புயலாக மாறுவதும் அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. அது மட்டுமல்ல, புயல்கள் அதிக நாள்கள் கடலில் நீடித்து, இதனால் அதன் தீவிரம் அதிகரிக்கும் அபாயமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.இதுவரை அதிக நாள்கள் கடலில் நீடித்த புயல்கள் பட்டியலில் அதி தீவிர புயலாக வாயு புயலான 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் உருவாகி 8 நாள்கள் நீடித்தன.2019ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் உருவான பானி புயல் 7 நாள்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.அதற்கு முன்பு, அதி தீவிர புயலாக ஒக்கிப் புயலானது 2014ஆம் ஆண்டு நவம்பர் – டிசம்பரில் உருவாகி 7 நாள்கள் நீடித்தன.ஆனால், தற்போது உருவாகியுள்ள பிபர்ஜாய் புயல் உருவாகி, கிட்டத்தட்ட 10 நாள்கள் கடலில் நீடிக்கிறது.

Share this post with your friends