டெல்லி முதலமைச்சரின் இல்லம் சீரமைப்புக்கு 45 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது குறித்து விளக்கம் அளிக்க கோரி முற்றுகை போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ள பாஜக தலைவர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்,ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் எப்போதும் மக்களின் முக்கிய பிரச்சினைகளை திசை திருப்புவார்கள். அதன் அடிப்படையில்,45 கோடி ரூபாயை செலவிட்டு, முதல் அமைச்சர் இல்லத்தை சீரமைத்து, மக்களின் வரி பணத்தை வீணடித்து உள்ளனர். இதைப்பற்றி கேள்வி எழுப்பினால், வழக்கம் போல் பிரச்சனையை திசை திருப்பும்; பணியில்; ஈடுபட்டுள்ளனர்.எனவே எங்கள் கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்கும் வரை எங்கள் தொண்டர்களின் இந்த போராட்டம் தொடரும். அதோடு, முதலமைச்சர் இல்லம் சீரமைப்புக்கு மக்கள் வரி பணம் செலவழித்து தொடர்பாக துணை நிலை ஆளுநரும்;; விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் என்று பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More