Mnadu News

பிரதமரின் இளைய சகோதரர் சென்னை மருத்துவமனையில் அனுமதி.

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி, உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னையை அடுத்த அயனம்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.முன்னதாக, அவர் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா வந்திருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐந்து உடன்பிறந்தவர்கள். ஒரு சகோதரி, 4 சகோதரர்கள். இவர்களில் பிரகலாத் மோடி நரேந்திர மோடிக்கு இளையவராவார். இவர் குஜராத் மாநிலம் ஆகமதாபாத்தில் மளிகைக் கடை வைத்திருக்கிறார். மேலும் வாகன டயர்கள் விற்பனை நிலையத்தையும் நடத்தி வருகிறார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More