கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராகப் பொறுப்பு ஏற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.பதவியேற்று முதல்முறையாக இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.பிரதமர் உடனான இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சந்திப்பின்போது, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More