கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாவல்குண்டு தொகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ள மத்திய உள்துறை அமைச்சா அமித் ஷா,”ஒரு பக்கம் ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மறு பக்கம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக உள்ளது. கர்நாடகா இரட்டை இஞ்ஜின் அதாவது மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி அரசை விரும்புகிறதா அல்லது ரிவர்ஸ் கீரில் செல்லக்கூடிய அரசை விரும்புகிறதா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானித்துவிடும்.அதே நேரம்,பிரதமர் நரேந்திர மோடியை உலகம் பாராட்டுகிறது மதிக்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்கள் அவரை அவமதித்து வருகிறார்கள். நமது பிரதமர் மோடியை பழிப்பதன் மூலம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற்றுவிட முடியாது என்று உரையாற்றினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More