Mnadu News

பிரதமர் மோடியை விமர்சித்த 3 அமைச்சர்கள் பணியிடை நீக்கம்!

கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது கருதப்படும் நிலையில், பிரதமரின் இந்த பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் சர்ச்சைக்குரிய வகையில் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.

அதில் “இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது என்றும், கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடனான போட்டியில் இந்தியா பல சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும்” என கூறினார். மேலும் சில மாலத்தீவு அமைச்சர்களும் மோடியின் பயணம் குறித்து கேலி செய்யும் விதமாக கருத்து பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து விமர்சன பதிவுகளை வெளியிட்ட மரியம் ஷுயினா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகிய 3 அமைச்சர்களை பணியிடை நீக்கம் செய்து மாலத்தீவு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More