சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பா.ஜ.க. கட்சி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக போட்டியின்றி மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து வருகிற 30ந்தேதி பிரதமராக அவர் பதவியேற்கிறார்.குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.
இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டு வருகிறது.பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்பொழுது, நான் மற்ற முதல் மந்திரிகளிடம் பேசியுள்ளேன். இது ஒரு மரபு ரீதியிலான நிகழ்ச்சி. அதனால் இதில் கலந்து கொள்வது என நாங்கள் நினைத்தோம். நான் இந்த விழாவில் கலந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.