Mnadu News

பிரதமர் மோடி மணிப்பூர் சென்று இயல்பு நிலையை உருவாக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல் அமைச்சர்; பைரேன் சிங் தலைமையில் பா.ஜ.க, ஆட்சி நடக்கிறது. இங்கு பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.அதையடுத்து,மாநிலத்தில் மீண்டும் இயல்புநிலையை ஏற்படுத்தும் வகையில் அமைதிக் குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது.இது குறித்து, பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் , பிரதமர் மோடி மணிப்பூர் சென்று இயல்பு நிலையை கொண்டு வர முயற்சிகள் எடுக்க வேண்டும்.அதோடு, பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும்.அதுமட்டுமின்றி, பிற கட்சி நிர்வாகிகளை மணிப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this post with your friends