Mnadu News

பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு செவாலியர் விருது

கர்நாடக இசையின் பிரதான பாடகராகவும், இசையமைப்பாளராகவும் கோலோச்சுபவர் அருணா சாய்ராம். இவர், இந்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மியூசிக் அகாடெமி சார்பில் சங்கீத கலாநிதி விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் அமெரிக்க காங்கிரஸின் “உயர் சிறப்பு விருதை” பெற்றுள்ளார்.இந்நிலையில், அவருக்கு பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செவாலியர் விருதிற்கு அருணா சாய்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து பிரான்ஸ் குடியரசின் கலாசார அமைச்சர் ரீமா அப்துல் மலாக், “இந்த விருது பிரெஞ்சு மற்றும் சர்வதேச கலை உலகிற்கு உங்களின் ஏராளமான பங்களிப்புகளுக்கு எங்கள் நாட்டின் பாராட்டுக்கான அடையாளமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends