Mnadu News

பிரபல இயக்குனர், இசையமைப்பாளர் இணையும் படம் ட்ராப்!

லோகேஷ் கனகராஜ்: 

மாநகரம் படத்தின் மூலமாக தமது ஸ்டைல் ஆப் கலை மொழியை வெளிப்படுத்தியவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ச்சியாக நம்பிக்கை அளிக்கும் வகையில் படங்களை கொடுத்து தற்போது தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி நடிகர்களும் இவர் இயக்கத்தில் நடிக்க பெரும் ஆவலோடு உள்ளனர். 

ஆம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கே படங்களில் தன்னை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியவர் லோகி. தற்போது, ₹25 கோடிகளை சம்பளமாக பெறுகிறார். லியோ படத்துக்கு பிறகு அவர் என்ன படம் எடுக்க போகிறார் என்பதே ஒரு பெரும் சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது. ஆம், ஒரு பக்கம் தலைவர் 171, இன்னொரு பக்கம் சூரியா, ஜெயம் ரவி, விக்ரம் 3 என எதுவாக இருக்கும் என பல ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர். 

அனிருத் : 

3 படத்தில் துவங்கிய இவரின் இசை பயணம் 10 ஆண்டுகளை கடந்து தொடர்ச்சியாக வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. ஆம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள் மட்டும் இல்லாமல் விளம்பரம், ஷோஸ் என ராக் ஸ்டார் அனிருத் படு பிஸியாக உள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் இவர் மூன்றாவது முறையாக இணைந்து உள்ளார் லியோ படத்தின் மூலமாக. கத்தி, மாஸ்டர் படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு ஒரு பெரும் ரசிகர்கள் படையே உண்டு எனலாம். தற்போது மூன்றாவது முறையாக விஜய் படத்துக்கு அனி இசை அமைத்து வருகிறார். அவ்வப்போது, அவர் விளம்பர வீடியோக்களில் தோன்ற நடிப்பதும் உண்டு. 

ட்ராப்பாகும் புதிய படம் : 

ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், அனிருத் இருவரும் லீட் ரோலில் நடிக்க உள்ளதாக சில மாதங்களாகவே தகவல் கசிந்து வந்தன. இதை உறுதி செய்யும் வகையில் அவர்களும் இருந்து வந்தனர். ஆனால், தற்போது வந்திருக்கும் செய்தி தான் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. ஆம், அவர்கள் ஹீரோவாக நடிக்கும் படம் ட்ராப் என்பது தான் அந்த அப்டேட். இருவருமே அவரவரின் பணியில் பிஸியாக உள்ளதால் இந்த ஹீரோவாக வொர்க் செய்யும் படத்தை தற்போது நிறுத்தி வைக்க முடிவு எடுத்துள்ளனர். இதனால் பல ரசிகர்களும் அப்செட்டில் உள்ளனர். 

Share this post with your friends