துணிவு படக்குழு:
ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித், மஞ்சு வாரியர், பிரேம், வீரா, மோகனசுந்தரம், ஜான் கொக்கென், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில், ஜிப்ரான் இசையில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் “துணிவு”.

படத்தின் கதை :
வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட துணிவு பொதுமக்கள் வங்கியில் பணம் போடும் போதோ அல்லது வேறு எதாவது முதலீடுகள் மேற்கொள்ளும் போதோ சிந்தித்து செய்ய வேண்டும் என்கிற கருத்தை அழுத்தமாக கொடுத்து மெகா வெற்றியை பதிவு செய்து உள்ளது.

வசூல் மற்றும் ஒ டி டி வெளியீடு :
இதுவரை துணிவு திரைப்படம் உலகமெங்கும் ₹250 கோடி வரை வசூலை ஈட்டி உள்ளது. அதே போல நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஒரு பெரும் தொகைக்கு இப்படத்தை வாங்கி இருந்த நிலையில், வரும் 8 ஆம் தேதி துணிவு
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது என அதன் பக்கத்தில் அறிவித்து உள்ளது.
