இரும்புத்திரை, ஹீரோ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்த P.S.மித்ரனுடன் கூட்டணி அமைத்துள்ளார் வந்தியத் தேவன் கார்த்தி.இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், படம் முடிவடையும் முன்னதாகவே படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படத்தில் இரு வேடங்களில் கார்த்தி நடிக்கிறார்.
கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார். சிம்ரன் ஜங்கி ஃபாண்டே, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
ஏற்கனவே படத்தின் டீஸர், பாடல் கவனம் ஈர்த்த நிலையில், இன்று மாலை 7 மணிக்கு படத்தின் டிரெய்லரை மக்கள் முன் ஒரு பிரபல மாலில் படக்குழு வெளியிடுகிறது. இப்படம் 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது.