விழுப்புரம் எம்.ஜி சாலையில் மூன்று தளங்கள் கொண்ட பிரபல மால் ஒன்றில் பல்பொருள் அங்காடி, துணிக்கடை, மூன்று திரையரங்கு உள்ளிட்ட பல கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று நான்கு கார்களில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் தற்போது மாலில் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மாலின் கதவுகள் பூட்டப்பட்டு பொது மக்கள் யாரும் வெளியே செல்லவும், வெளியில் இருந்து பொது மக்கள் யாரும் உள்ளே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் பலர் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக எழுந்த புகாரினை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More