இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் “கும்கி” படம் 10 வருடங்களை நிறைவு
செய்தது. இதை இயற்கை இயக்குநர் பிரபு சாலமன் இயக்கி இருந்தார். கும்கி படத்துக்கு பிறகு சொல்லிக்கொள்ளும் படியான வெற்றி பிரபு சாலமனுக்கு கிட்டவில்லை.
இந்த நிலையில், கோவை சரளா, அஷ்வின் முன்னணி ரோல்களில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகி உள்ளது “செம்பி”. இப்படம் வரும் டிசம்பர் 30 அன்று வெளியாக உள்ள நிலையில், இதன் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலம் மீண்டும் பிரபு சாலமன் வாழ்வில் ஒளி பரவும் என நம்பலாம்.
டிரெய்லர் லிங்க் : https://youtu.be/AblYGz3UrjI