Mnadu News

பிரமிக்க வைக்கும் அவதார் 2 டிரெய்லர்!

2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகமெங்கும் உள்ள திரை அரங்குகளில் வெளியான அவதார் திரைப்படம் வசூல் சுனாமி நடத்தியது.

இப்படத்தின் கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகமான” அவதார்: தி வே ஆப் வாட்டர்” உருவாகி உள்ளது.

இப்படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தண்ணீரை பற்றிய படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

இந்நிலையில்,’ அவதார்: தி வே ஆப் வாட்டர்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி மீண்டும் ரசிகர்களை ஈர்த்து உள்ளது. இப்படம் உலக அளவில் உச்சபட்ச வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரெய்லர் லிங்க்: https://youtu.be/Gzg1LRRinlA

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More