Mnadu News

பிரம்மாண்ட முறையில் துணிவு பட பிரீ ரீலீஸ் இவெண்ட்! தல இருப்பாரா ? பிரத்யேக தகவல் உள்ளே!

பொதுவாகவே எவ்வளவு பெரிய படங்களை எடுத்தாலும் அதற்கு பெரிய அளவில் புரொமோஷன் செய்யவில்லை என்றால் அந்த படம் நிச்சயம் நினைத்த அளவு வெற்றியை பதிவு செய்தது.

அப்படி, பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வருகிறது இரண்டு மாபெரும் நடிகர்களின் மாபெரும் படங்கள். அவை துணிவு மற்றும் வாரிசு.இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் எதிர்பார்ப்பு உள்ளதால் இந்த முறை பொங்கல் பண்டிகை இன்னும் சுவை கூடுதலாகவே இருக்க போகிறது.

இந்த நிலையில் இரு படக்குழுவினரின் கலைஞர்களும் படத்தின் அடுத்த கட்டமான புரொமோஷன் பணியில் இறங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, தற்போது வெளியாகி உள்ள பிரத்யேக தகவல் என்னவென்றால் அஜித் ஓகே சொல்லும் பட்சத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட முறையில் துணிவு பிரீ ரீலீஸ் இவெண்ட் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதற்கிடையில் இரு படங்களின் முதல் சிங்கிள் வர உள்ளது குறிப்பிடதக்கது.

Share this post with your friends