Mnadu News

பிரான்சில் ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவனை சுட்டுக் கொன்ற போலீஸ்: பற்றி எரியும் பாரிஸ் நகரம்.

பாரிஸ் நகரின் நான்டெர் புறநகர்ப் பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். புதன்கிழமை இரவு சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காரை காவல்துறையினர் நிறுத்த உத்தரவிட்டும் அது நிறுத்தப்படாததால் போலீஸார் அதனை விரட்டி சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் காரில் இருந்த ஆப்பிரிக்க சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அச்சிறுவன் உயிரிழந்தார்.இதையடுத்து,அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அது வன்முறையாக வெடித்தது. அதையடுத்து பல்வேறு இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததால் பாரிஸ் பற்றி எரிகிறது.இதனால்,அமைதியை நிலைநாட்ட சுமார் இரண்டாயிரம் போலீஸார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

Share this post with your friends