Mnadu News

பிரான்சில் தொடரும் கலவரம்;: விருந்தில் பங்கேற்ற அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு.

பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக நடக்கும் கலவரம் 4வது நாளை எட்டி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, கலவரம் நடக்கும் நிலையில், விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் மேக்ரானுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த செயல் முற்றிலும் பொறுப்பற்றதனமானது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. சமூக வலைதளங்களிலும் பயனாளர்கள், அதிபர் மேக்ரானை வசைபாடி வருகின்றனர்.

Share this post with your friends