பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கே, ஒரு நபர் அமர்ந்து செல்ல கூடிய இருக்கை கொண்ட விமானத்தில் ஒருவர் பயணம் செய்துள்ளார் என்றும், அவர் போதை பொருள் கடத்தல்காரர் என கூறப்படுகிறது.மேலும், அவர் ஆர்டிக் என்ற தடை செய்யப்பட்ட வான்வெளி பகுதி வழியே சென்று உள்ளார். அதன் அருகே அணு உலை ஒன்று உள்ளதாலும், சந்தேகம் அளிக்கும் விதமாக விமானம் பறந்ததாலும், தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக அதுபற்றி ஆய்வு செய்ய சென்றனர். இதன்பின் ரபேல் போர் விமானம் ஒன்று அந்த விமானத்திற்கு குறுக்காக சென்று அதனை வழி மறித்து உள்ளது.
இதனை கவனித்த அந்த விமானி, தனது இருக்கையில் இருந்தபடி கதவை திறந்து சில போதை பொருட்கள் கொண்ட பாக்கெட்டுகளை வெளியே வீசியுள்ளார். அதன்பின், ஆர்டிக் பகுதியில் வேறொரு இடத்தில் அவர் தரையிறங்கி உள்ளார்.
மேலும், அவரை துரத்தி சென்று அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் அவர் போலந்து நாட்டை சேர்ந்தவர் என்றும், கடந்த காலங்களில் போதை பொருள் குற்றசம்பவங்களுடன் தொடர்பில் உள்ளவர் என தெரிய வந்தது. அவரது விமானமும் போலந்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. சோதனையில் பல ஆயிரம் யூரோ பணக் கட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பகுதியில் கிடந்த 15 பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். போதை பொருட்கள் இருந்த அந்த பாக்கெட்டுகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.