Mnadu News

பிரான்ஸ் ஒயின் திருவிழாவில் மின்மினிகளாக மாறிய ட்ரோன்கள்: வானில் மாயாஜாலம்.

பிரான்ஸ் நாட்டில் அண்மையில் நிறைவுற்ற போர்டியாக்ஸ் ஒயின் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இரவு நேர வானில் அணிவகுத்து மாயாஜாலம் செய்துள்ளன.இந்த நிகழ்வு சார்ந்த வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. வானில் ஒயின் பாட்டிலில் இருந்து கோப்பையில் ரெட் ஒயின் ஊற்றுவது போன்ற வீடியோவும் அடங்கும். அந்த அளவுக்கு மிகவும் நேர்த்தியாக ட்ரோன்கள் அணிவகுத்து வானில் இதனை நிகழ்த்தி இருந்தன. நிச்சயம் அந்த ட்ரோன்களை ரிமோட் கொண்டு இயக்கிய பைலட்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அழகியலுடன் அமைந்திருந்தது அந்தக் காட்சி.

Share this post with your friends