இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்கு உள்பட்ட ஒரு வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டினர்.முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பிரிஜ் பூஷண் மீது டெல்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. அதில் ஒரு வழக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகும். 18 வயதுக்கு உள்பட்ட வீராங்கனையின் புகாரில் இந்த வழக்கு பதியப்பட்டது.அதே நேரம்,18 வயதுக்கு உள்பட்ட வீராங்கனையின் தந்தையால் அளிக்கப்பட்ட இப்புகாரில் உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதால் பிரஜ் பூஷண் மீதான போக்ஸோ வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு காவல்துறையினர் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில், பிரஜ் பூஷண் வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 27-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் தொடரவுள்ளது.

ஆக்கிரமிப்பு எங்கே உள்ளது சொல்லுங்க? அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
Read More