இந்திய மல்யுத்த சம்மேளனத்தின தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், அமித் ஷா ஆகியோரும் மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.எனினும் ரயில்வே துறையில் தாங்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல்சார் பணிகளை நிறைவேற்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பணியில் இணைந்துள்ளனர். பிரஜ் பூஷணை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறையினர், பிரஜ் பூஷணுக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக 25 பேர் வாக்குமூலம் தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More