Mnadu News

பிரின்ஸ் படத்தை வெளியிடும் பிரபல ஓடிடி நிறுவனம்!

தெலுங்கு இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் தமன் இசையில் சிவா, மரியா ரபோஷக்கா, சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது “பிரின்ஸ்” திரைப்படம்.

மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் தோல்வியை கண்டது இப்படம்.

₹40 கோடிகளில் எடுக்கப்பட்ட இப்படம் வெறும் ₹30 கோடிகளை மட்டும் வசூல் செய்தது. ஆனாலும், சிவாவின் மார்கெட் சற்றும் குறையாமல் ஒரு படத்துக்கு ₹25 கோடிகளை சம்பளமாக பெற்று வருகிறார்.

தற்போது, பிரின்ஸ் திரைப்படத்தை பிரபல ஓ டி டி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வாங்கி உள்ளது. வரும் 25 அன்று அந்த தளத்தில் இப்படம் வெளியாகிறது.

Share this post with your friends