Mnadu News

பிருத்வி ஷா தாக்குதல்: நடிகைக்கு வரும் 20 ஆம் தேதி வரை போலீஸ் காவல்.

மும்பை சாண்டா குரூஸ் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில் 2-வது தடவையாக செல்பி எடுக்க சம்மதிக்காத காரணத்தால் பிரபல கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவை போஜ்பூரி நடிகை சப்னா கில் தாக்கினார். இதன் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது. அதோடு,; பிருத்வி ஷாவின் நண்பரின் காரும் தாக்கப்பட்டது. காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் மீது மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்டு, அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை சப்னா வரும் 20-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share this post with your friends