பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு லுசோன் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள அப்ரா மாகாணத்தின் லகாயன் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.
பிலிப்பைன்ஸ் தேசிய நிலஅதிர்வு ஆய்வு மையம் கூறுகையில் “நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 11 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அறிவித்து உள்ளது”. இந்த அதி பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
அதோடு, ஒரு விமான நிலையம், மருத்துவமனை, தேவாலயம் ஆகியவையும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்தன. இதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என கருதப்படும் நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.