கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டதுடன், அவரது குடும்பத்தினர் அவரது கண்முன்பாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்று வந்த 11 பேரின் தண்டனை காலம் குறைக்கப்பட்டு அவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 30-ம் தேதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அஜய் ரஸ்டோகி மற்றும் பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணையில் இருந்து தனது சக நீதிபதி பெலா எம் திரிவேதி விலகுவகாக நீதிபதி அஜய் ரஸ்டோகி தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. எனினும், நீதிபதியின் விலகலுக்கான எந்தக் காரணத்தையும் அந்த அமர்வு தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் இதே அமர்வில் விசாரணைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More