தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, ஜூன் 19ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வு தொடங்குகிறது. ஜூன் 20ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வு நடைபெறும். தொடர்ந்து ஜூன் 26 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை ஜூன் 14-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தனித்தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More