Mnadu News

பிளாஸ்டிக் தடை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் சுமார் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது . தடையை மீறி யாராவது பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க படும் என்று கண்டிக்கும் விதமாக அரசு உத்தரவிட்டுள்ளது .

இந்நிலையில் இந்த நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது . பிளாஸ்டிக் பொருட்களை விற்பது, சேமித்து வைப்பது, பிற இடங்களுக்கு கொண்டு செல்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வந்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் .

இந்த அபராதத்தை பெரிய நிறுவனம் நடுத்தர நிறுவனம் மற்றும் கடைகள் மற்றும் சிறிய வியாபார கடைகள் என்று பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார் .

Share this post with your friends