அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க,வை எதிர்க்க எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரள திட்டம் தீட்டி வருகிறது.இந்த நிலையில்; பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக உத்தர பிரதேச முன்னாள் முதல் அமைச்சரும்;, பகுஜன் சமாஜ் கட்சித்தலைவருமான மாயாவதி அறிவித்துள்ளார்.அதோடு,”பணவீக்கம், வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பின்தங்கிய நிலை, கல்வியறிவின்மை, இன வெறுப்பு, மத வன்முறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நம் நாட்டில், காங்கிரஸ், பா.ஜ.க, போன்ற கட்சிகளால் மனிதநேய சமத்துவ அரசியலமைப்பை செயல்படுத்த இயலாது” எனக் கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More