Mnadu News

பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விபத்து:ஒரு மாதத்தில் 2-வது சம்பவம்.

பீகாரில் தலைநகர் பாட்னாவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, கிஷன்கஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மெச்சி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தில் உள்ள தூண் ஒன்று திடீரென இடிந்து விழுந்து உள்ளது. இந்த பாலம் ஆனது கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வந்து உள்ளது. கட்டுமான பணியின்போது, மனித தவறால் தூண் இடிந்து விழுந்து உள்ளது என இந்திய தேசிய நெடுஞ்சாலை கழகத்தின் திட்ட இயக்குநர் அரவிந்த் குமார் கூறியுள்ளார்.இந்த சம்பவத்தில் ஒருவரும் காயம் அடையவில்லை என கூறியுள்ள அவர், இதுபற்றி விசாரணை நடத்த நிபுணர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends