பீகாரில் ஆசியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அரசிடமும், பள்ளிக்கல்வித் துறையிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பொறுமையிழந்த ஆசிரியர் தேர்வர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் பாட்னாவில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் எச்சரிக்கை கொடுத்தும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஒரு கட்டத்தில் போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டக்காரக்காரர்களை கலைத்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More