Mnadu News

பீகார் பால விபத்து: மாயமான காவலாளி 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு.

பீகார் மாநிலம் பஹல்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே சுல்தான்கஞ்ச் – அகுவானி பகத் பகுதியை இணைக்கும் வகையில் 4 வழி பாலம் கட்டப்பட்டு வந்தது.இந்த பாலம் கடந்த 4-ஆம் தேதி காலை 6 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளை, பாலம் இடிந்து விழுந்த சமயத்தில் பாலத்தில் பணியாற்றி வந்த விபஷாகுமார் என்ற காவலாளி பணியில் இருந்தார். ஆனால் பால விபத்திற்கு பிறகு அவர் மாயமானார். அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், விபத்து நடந்த 10 நாட்களுக்கு பின் காவலாளி விபஷாகுமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பால இடிபாடுகளுக்குள் நடந்த பகுதியில் தேடுதல் பணி நடைபெற்ற நிலையில் விபஷாகுமாரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

Share this post with your friends