தமிழகத்தில் நகர்ப்புற புதிய பேருந்து நிலையங்கள் கட்டும் பணியை தமிழக அரசு செய்து வருகிறது. இதன்படி மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையங்கள் கட்டுப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நகராட்சி நிர்வாக துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதில் திரூப்பூரில் ரூ.26 கோடி மற்றும் ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதோடு, அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More