கோவை மாவட்டம் ஆளியார் அணையிலிருந்து புதிய ஆயகட்டு பாசனத்திற்கு கடந்த 28ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த அரசாணையில் நாட்களை குறைத்து எத்தனை நாட்கள் தண்ணீர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லாமல் அரசாணை வெளியிட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 50 ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் நடைமுறையை பின்பற்றி தண்ணீர் வழங்க வேண்டும் எனக் கூறி இன்று ஆழியார் படுகை புதிய ஆயகட்டு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்காவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில் ஆண்டுதோறும் திறந்து விடப்படும் தண்ணீர் 135 நாட்களுக்கு கிடைப்பதில்லை
75 நாட்களுக்கு தான் கிடைக்கிறது. அதற்குள் மழை காலம் தொடங்கி விட்டால் இந்த தண்ணீரை பயன்படுத்த முடிவதில்லை. மழைக்காலம் முடிந்த பிறகு அணை நீரை பயன்படுத்துவோம்.
ஆனால் நாட்களை குறைத்து வழங்கினால் முழுமையான பாசனம் செய்ய முடியாது பயிர்கள் கருகும் அபாயம் ஏற்படும் எனவே தமிழக அரசு 135 நாட்களுக்கு மிகாமல் தண்ணீர் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் இல்லை என்றால் இந்த நீரினை பயன்படுத்த மாட்டோம் மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.