இந்திய தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் சனிக்கிழமை நியமனம் செய்யப்பட்டார். 1985-ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், இந்திய தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்றுக்கொண்டார். இவர் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் தேர்தல் ஆணைய குழுவில் இடம்பெறவார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பணி ஓய்வு பெற்ற பின்னர், அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்பார்.
பின்னர், 2027-ஆம் ஆண்டு டிசம்பரில் 65 வயதை எட்டும்போது அந்தப் பதவியிலிருந்து கோயல் ஓய்வு பெறுவார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More