Mnadu News

புதிய நாடாளுமன்ற கட்டிடம் 28 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல்.

நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ஆம் தேதி திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் டெல்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டி வருகிறது. நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த நிலையில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ஆம் தேதி திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More