மூன்றாவது முறையாக பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் இன்று நடைபெற்ற கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே கடந்த காந்தி ஜெயந்தி மற்றும் சுதந்திர தினத்தன்று ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபைகளில் இந்த பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் இன்றைய தினம் மூன்றாவது முறையாக ஏகனாபுரம் கிராம மக்கள் ஒருமனதாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More