Mnadu News

புதுச்சேரியில் ஜி 20 மாநாடு கருத்தரங்கம் தொடங்கியது .

ஜி-20 குழுவின் 18வது மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் ஜி-20 மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக அதன் துணை கூட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடக்கவுள்ளன. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் ஜி-20 மாநாட்டின் ஆரம்பக்கட்ட கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக்கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு நிறைவடையும். இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, யூரோப் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தேசிய அறிவியல் அககாடமியின் தலைவர் அசுதோஷ் சர்மா தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. நட்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். கடந்தாண்டு ஜி-20 மாநாடு நடத்திய இந்தோனேசியா, நடப்பு ஆண்டு தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியா, அடுத்த ஆண்டு தலைமை பொறுப்பேற்கவுள்ள பிரேசில் நாடுகளின் தலைமை விஞ்ஞானிகள் உரையுடன் மாநாடு தொடங்குகிறது.

Share this post with your friends

நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல: ராகுல் காந்தி ஆவேசம்.

டெல்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல்...

Read More